நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்யின் அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கும் இடமளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சி அமைக்க 120 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதில் முக்கியப் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான அமைச்சர்கள் யார் என்ற பட்டியலை காங்கிரஸ் மேலிடம் விரைவில் தவெகவிடம் வழங்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே விசிக தரப்பில் வன்னி அரசு அமைச்சராக உள்ளதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸின் இந்த என்ட்ரியும் சேர்ந்துள்ளதால் விஜய்யின் அமைச்சரவை ஒரு “மெகா கூட்டணி” அமைச்சரவையாக உருவெடுத்துள்ளது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருந்த தமிழக காங்கிரஸ், விஜய்யின் ஆதரவோடு மீண்டும் கோட்டைக்குள் நுழையப்போவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு அமைச்சர்கள் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் இன்னும் சில மணி நேரங்களில் உடையப்போகிறது.