தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, 120 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் வேளையில், விசிக தலைவர் திருமாவளவன் அதிரடியான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சி ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளைகள் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்தில் தமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என அவர் வெளிப்படையாகக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மதியம் 3:15 மணிக்கு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், கூட்டணியில் இருந்துகொண்டே திருமாவளவன் இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்தது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சூழலில், திருமாவளவனின் இந்த ‘யூ-டர்ன்’ பேச்சு விஜய்யின் புதிய அமைச்சரவை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துவிட்டு, மறுபுறம் கொள்கை ரீதியான இத்தகைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள விசிக-வின் இந்த இரட்டை நிலைப்பாடு தமிழக அரசியலில் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்!