Breaking: “லீட் செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு”… 120 என்ற மேஜிக் நம்பருடன் களமிறங்கும் விஜய்.. வாழ்த்தித் தள்ளிய காங்கிரஸ்..!!!
SeithiSolai Tamil May 10, 2026 12:48 AM

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

120 எம்.எல்.ஏ-க்களின் பலத்துடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், “Time To Lead” (தலைமையேற்க வேண்டிய நேரம் இது) என்று குறிப்பிட்டு காங்கிரஸ் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு, தமிழகத்தின் புதிய விடியலுக்காக விஜய்யின் கையை காங்கிரஸ் பிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் “காமராஜர் ஆட்சியை” மீண்டும் கொண்டுவர தவெக-காங்கிரஸ் கூட்டணி உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள இந்தக் கட்சியின் பதிவு, தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. நாளை மதியம் 3:15 மணிக்கு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸின் இந்த ஆதரவுப் பதிவு தவெக தொண்டர்களுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.