Karuppu: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!
TV9 Tamil News May 10, 2026 04:48 PM

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் 3வது திரைப்படமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு, கோவையில் இதன் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இதில் ஆக்ஷன் நாயகனாக சூர்யா (Suriya) நடித்துள்ள நிலையில், அவருக்கு ஏற்ற அதிரடி நாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த கருப்பு படமானது நீதி, தெய்வீகம், ஆக்ஷ்ன் மற்றும் ஆகா மொத்தத்தில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தி ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கேளே ஆர்.எஸ். பிரபு தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரையில் இப்படைத்திருந்துஹ் 4 பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் பிரச்சனைகள் இருந்ததால் கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள. அதன் டபுள் ட்ரீட்டாக கருப்பு படத்தின் ட்ரெய்லர் இன்று (10/05/2026) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

கருப்பு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு பதிவு:

The much awaited announcement is here 🔥#KaruppuTRAILER from today, 7PM!#Karuppu in theatres worldwide from May 14th 💥

A @SaiAbhyankkar Musical 🎵@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy… pic.twitter.com/yeebYrX4nH

— DreamWarriorPictures (@DreamWarriorpic)

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர், இன்று 2026 மே 10ம் தேதியில் மாலையில் 7 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ட்ரெய்லர் முழுக்க ஆக்ஷன், அதிரடி மற்றும் தெய்வீகம் நிறைந்த கதையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மக்கள் மத்தியில் அதிரடி வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதலமைச்சராக பதிவியேற்ற மகன் விஜய்.. கண்கலங்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவும் நிலையில், அத்துடன் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் இன்று தொடங்குகிறது. கருப்பு பட டிக்கெட் ப்ரீ புக்கிங் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கவுள்ளது. அந்த வகையில் இப்படமானது பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவிற்கு ஒரு கம்பேக் படமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. சூர்யாவிற்கு இறுதியாக ரெட்ரோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதையடுத்து கருப்பு படமானது நிச்சயம் சிறப்பான வரவேற்பை கொடுக்கும் என வட்டாரங்கள் கூறுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.