சிலம்பரசனின் போட போடி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் சூர்யா (Suriya) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 66 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையிலிப்படம் விக்னேஷ் சிவன் எதிர்பார்த்ததுபோல என்று கூறலாம். இந்நிலையில் இன்று 2026 மே 10ம் தேதியில் உலக அன்னையர் தினம் (International Mother’s Day).
அந்த வகையில் தனது மனைவியும், தனது குழந்தைகளின் தாயான நயன்தாராவிற்கு (Nayanthara), மதர்ஸ் டே வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். நயன்தாராவிற்கு வாழ்த்திய தெரிவித்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: நான் தான் கிங்… அர்ஜுன்தாஸின் கான் சிட்டி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
View this post on Instagram
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)
இந்த பதிவில் விக்னேஷ் சிவன், “நம் குழந்தைகளின் ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னாலும், இரவும் பகலும் அமைதியாக உழைக்கும் உங்கள் அன்பு இருக்கிறது, உங்களைப் பற்றிய மிக அழகான விஷயம், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல.. நம் குழந்தைகளை உங்கள் யுனிவெர்சை மையமாக உணர வைத்ததுதான். அந்த மாதிரியான அன்பு அரிதானது மற்றும் மிகவும் ஆழமானது ❤️❤️❤️ இத்தனைக்கும் மத்தியிலும் நீங்கள் எங்கள் குழந்தைகளை நேசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஹேப்பி மதர்ஸ் டே. நயன்தாரா நீங்கள் எனது உயிர் + எனது உலகம்” என அதில் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இவ்வாறு மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்தை தெரிவிக்கமுடியுமா என ரசிகர்களையே ஆசிரியப்படவைத்தார் என்று கூறலாம்.
இதையும் படிங்க: அவர் கொடுத்த முதல் வாய்ப்பு.. நான் சினிமாவில் இந்த நிலையில் இருக்க விஜய் அண்ணன்தான் காரணம் – நடிகர் ஜெய் பேச்சு!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருமே கடந்த 2022ம் ஆண்டில் காதலித்த திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என இரு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகையாக நயன்தாராவும் தொடர்ந்து படங்களில் நடித்துவர, இயக்குநராகவும் விக்னேஷ் சிவன் படங்களை இயக்கிவருகிறார். இவருவருமே தங்களின் தொழில் எந்த மாற்றமும் இல்லாமல் தங்களின் வாழ்க்கையை நடந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.