தமிழக அரசியல் களத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் இணைந்திருக்கும் வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவிற்கு “சில கூட்டணிகள் ஆட்டத்தையே மாற்றிவிடும்” (Some collabs change the game) எனப் பொருள் தரும் வகையில் கேப்ஷன் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள் குவிகின்ற நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோ அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பையும், எதிர்கால அரசியல் பிணைப்பையும் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ராகுல் – விஜய் ஆகியோரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, தேசிய அளவிலும் தமிழக அளவிலும் இந்தக் கூட்டணி ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.