“ஜோதிடர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல”- சண்முகம்
Top Tamil News May 12, 2026 11:48 PM

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு ஆலோசகராக ஜோதிடர் ரதன் பண்டிட் வெற்றி வேல் நியமிக்கப்பட்டதற்கு CPIM கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

CPIM மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.