2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
குலசேகரன் முனிரத்தினம் May 25, 2026 09:14 AM

Petrol Diesel Price: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு:

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை டீசலுக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூப்பாய் 57 காசுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து சில்லறை விற்பனையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய் 77 காசுகளையும், டீசல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.