“ஏற்கனவே 5 குழந்தைங்க.. இப்போ 6-வதா..?” – 22 வயது தாயின் நிலையைப் பார்த்து கதறிய லேடி டாக்டர்.. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்பே நடந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!”
SeithiSolai Tamil May 25, 2026 10:48 AM

உத்தரப் பிரதேசத்தில் 22 வயது பெண் ஒருவர், ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நிலையில் தற்போது ஆறாவது முறையாகக் கர்ப்பமடைந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஸ்பந்தன் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரக்யா தோமர் பகிர்ந்த வீடியோ மூலம் வெளிவந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு 15 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு மகள்களும் ஒரு மகனும் இருக்கும் நிலையிலும், வம்சத்தை வளர்க்க ஒரே ஒரு மகன் மட்டும் போதாது, இன்னொரு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆண் குழந்தைக்கான சமூக அழுத்தம் மற்றும் அப்பெண்ணின் உடல்நிலை குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அடுத்தடுத்து தொடர்ச்சியான பிரசவங்களால் அந்தப் பெண் ஏற்கனவே மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சிறிய வயதில் போதிய இடைவெளியின்றி அடுத்தடுத்து குழந்தை பெற்றுக் கொள்வது தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ள மருத்துவர், முறையான குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு இல்லாததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram