கடந்த பல வருடங்களாகவே சனாதானத்தை திமுக எதிர்த்து வருகிறது. ஏனெனில் சனாதானம் சாதி, மத பிரிவினைகளை உண்டாக்குகிறது என திமுக தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறது. எனவே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையாக இருக்கிறது. முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன..
இது சனாதானத்தை தூக்கி பிடிக்கும் பாஜாகவுக்குகு தொடர்ந்து கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் திமுக ஆட்சி நடைபெற்றதால் அவர்களால் இங்கே ஏதும் செய்ய முடியவில்லை. தற்போது தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.. விஜய் முதல்வராக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்.. மக்களை பிரிக்கும் சனாதானம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் ‘ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி திருந்தவில்லை.. மக்கள் திருத்தும் காலம் வரும்.. இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான் ஆட்சியிலிருந்து இருந்து மக்கள் விரட்டியுள்ளனர்’ என அவர் கூறியிருக்கிறார்..