“கோயிலுக்குப் போகக்கூடாதுன்னு சொல்லல” ஆனா… உதயநிதி கொடுத்த அதிரடி விளக்கம்.. ஸ்டாலினே எதிர்பார்க்காத அந்த ஒரு பதில்…!!!
SeithiSolai Tamil May 15, 2026 05:48 PM

தமிழக சட்டப்பேரவையில் சனாதனம் குறித்து தான் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், சமூகத்தில் நிலவும் சாதியப் பிரிவினைகளையும், ஒடுக்குமுறைகளையும் மட்டுமே எதிர்ப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மக்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுப்பதற்கல்ல, மாறாகக் கோயில்களிலும் சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பெரியார், அம்பேத்கர், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் கொள்கை வழியிலேயே தான் பயணிப்பதாகக் குறிப்பிட்ட உதயநிதி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கினைத் தான் திராவிட இயக்கம் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேல் சாதி – கீழ் சாதி என மக்களைப் பிரிக்கும் பாகுபாடுகளை ஒழிப்பதே தனது பேச்சின் நோக்கம் என்றும், விமர்சனங்களுக்கு அஞ்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். சமூக நீதியும் சமத்துவமுமே தங்களின் அடிப்படை இலக்கு என்பதை இந்த விளக்கத்தின் மூலம் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.