அதிமுக திமுக இணைந்த ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சி செய்தார்கள் - சிபிஆர் நிர்மல் குமார் !
அதிமுக - திமுக இணைந்த ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சி செய்தார்கள், மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானிக்க தலைவர்கள் வேண்டாம் என்பதால் தான் பின்புறம் வழியாக கள்ளக் கூட்டணி நிராகரிக்கப்பட்டது. மதுரை சிபிஆர் நிர்மல் குமார் பேட்டி.
சி.டி.ஆர் நிர்மல் குமார்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து முதல் முறையாக மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்..,"
தவெக தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வ பணிகள் நடைபெற்று வருகிறது. மதுபான கடைகள் மூட பக்கத்தில் இருந்து பெண்களுக்கான பாதுகாப்பு செய்வதிலிருந்து அனைத்தும் ஆக்கப்பூர்வமாக செய்யப்பட்டு வருகிறது. மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அது 100% நிறைவேற்றப்படும். போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதலமைச்சர் தமிழக முழுவதும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். பழைய திட்டங்கள் எல்லாம் தொடரும் என்று சொன்னதிலிருந்தார் அதன்படி மகளிர் உரிமைத்தகையா ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்கள் மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மதுரை மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய் தேவை என்று அடிப்படையில் விஷயம் உள்ளது. படிப்படியாக நிறைவேற்றப்படும்.
மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும் பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் சேர்த்த பிறகு தான் அறிவிக்க முடியும். அதற்காக டைம் வேண்டும் என முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். சட்டமன்றத்தில் 144 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆச்சி எப்போது வேண்டுமானாலும் களையலாம் என ஸ்டாலின் கூறியது ஒட்டுமொத்த மக்கள் அடித்த தீர்ப்பு யார் எதுவும் செய்ய முடியாது. மதுரை மாநகராட்சி இதுவரைக்கும் நடந்த ஊழல்களை சீரமைக்க வேண்டும். ஊழல் இல்லாமல் தடுக்க வேண்டும் என்ற எங்களுடைய முதல்வர் எடுத்து வருகிறார். பூரண மதுவிலக்கு சாத்தியமா? படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும் முதல் கட்டமாக 717 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை தடுக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார்.
கடந்த முதல்வர் ஸ்டாலின் நீட் எதிராக கடிதம் மட்டுமே எழுதுகிறார் என விஜய் விமர்சனம் செய்தார் தற்போது விஜய் கடிதம் எழுதிருக்கிறார் என்ற கேள்விக்கு?
நீட் தேர்வு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த முடியாத நிலையில் உள்ளது. மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
மக்கள் தீர்ப்புக்கு ஆதரவளிக்கிறோம்
நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எட்டாத கனியாக உள்ளது. நீட் வேணாம் என்பது தான் எங்களுடைய நோக்கம். உச்ச நீதிமன்றமும் வானில் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். நீட் ரேங்கில் மிகப்பெரிய குளறுபடிகள் உள்ளது. நீட்டல் எந்த பயனும் இல்லை. மதுபான கடைகள் நேரம் குறைக்கப்படுமா முதல்வர் தான் முடிவு செய்வார். அதிமுக உட்கட்சி பிரச்சனை. எடப்பாடி அவர்களும் ஸ்டாலின் அவர்களும் வார பத்திரிக்கையில் வந்தது திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக கூறியிருந்தது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் வெளியே வந்து மக்கள் தீர்ப்புக்கு ஆதரவளிக்கிறோம் என கூறி இருக்கிறார்கள்.
புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர்
உதயநிதி மற்றும் ஸ்டாலின் எடப்பாடி ஆகியோர் சேர்ந்து புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர். என அந்த கட்சியில் இருக்க எல்லோரும் சொன்னார்கள். திமுக அதிமுக இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க 100 சதவீதம் முயற்சி செய்தனர். அது அவர்கள் கூட்டணி கட்சியினர் மூலமாக தகவல் தெரிந்து கொண்டோம். ரகசியமாக சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக திமுக இணைந்த ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சி செய்தார்கள், மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக திருமணமான தலைவர்கள் வேண்டாம் என்பதால் தான் பின்புறம் வழியாக கள்ளக் கூட்டணி நிராகரிக்கப்பட்டது.
முதல்வர் விஜய் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை.
ஒரு சில பேரை ஒரு சில நேரத்தில் சந்தித்தால் சரியாக இருக்காது மக்களுக்கும் எதிராக இருக்கும் சூழ்நிலைக்கும் எதிராக இருக்கும். சரியாக இருக்காது என்பதனால் தான் சந்திக்கவில்லை.