திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு, சினிமா துறையிலிருந்து சிஎம் நாற்காலிக்குச் சென்ற விஜய்க்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பின்போது, நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் மற்றும் கலைஞர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திரைத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது அரசு நிச்சயம் செய்யும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். இந்த நட்சத்திரச் சந்திப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல்!