தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்த பின், பிரபல இயக்குனர் விக்ரமன் நெகிழ்ச்சியுடன் அளித்த பேட்டி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
“முதலமைச்சர் என்ற பந்தா அவரிடம் துளி கூட இல்லை; 32 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப் பேசினாரோ, அதே எளிமையுடன் இப்போதும் பழகினார்” என்று நெகிழ்ந்த விக்ரமன், “நான் எப்போதும் உங்க விஜய் தான், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று முதல்வர் விஜய் தன்னிடம் கூறியபோது கண்கள் கலங்கிவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்தார்.
தவெக தலைவராகப் பொறுப்பேற்று முதல்வரான பின்னும், திரைத்துறையில் தனக்கு வாழ்வளித்த இயக்குனர்களிடம் பழைய பாசத்துடனும் மரியாதையுடனும் விஜய் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
“>