ஹெல்லல்லல்லோ.. ராம் சரணுடன் ஸ்ருதிஹாசன் – ஜான்வி கபூர்.. வெளியானது ஹெல்லல்லல்லோ ஆடியோ பாடல்!
TV9 Tamil News May 24, 2026 03:48 PM

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் 16வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் பெத்தி ((Peddi). இப்படத்தை தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா (Buhi Babu Sana) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் புச்சி பாபு சனாவுடன் இணை இயக்குநராக புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தில் ராம் சரண் மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் ஓட்ட நாயகனாக ஒரு விளையாட்டு வீரனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் (janhvi Kapoor) நடித்துள்ளார். இப்படமானது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கிலும் வெளியாக தயாராகிவருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில், இதுவரை இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. மூன்றாவது பாடலாக உருவாகியுள்ளதுதான் ஹெல்லல்லல்லோ (Hellallallo). இப்பாடலில் ஸ்ருதிஹாசன் (Shruti Hasaan) சிறப்பு நடனமாடியுள்ளார். அந்த வகையில் இப்பாடலை படக்குழு இன்று (23/05/2026) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த கர படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? எதில் பார்க்கலாம்!

பெத்தி படக்குழு வெளியிட்ட ராம் சரண் மற்றும் ஸ்ருதிஹாசனின் ஹெல்லல்லல்லோ பாடல் குறித்த பதிவு:

#Hellallalo Full Song Out Now 💥🔥

🖇️https://t.co/SFx72cN50j pic.twitter.com/18rjGcvtJT

— Satish Kondala 🇮🇳 (@KondalaSatish)

இந்த பெத்தி திரைப்படமானது முழுக்க விளையாட்டை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிராமத்திலிருந்து விளையாட்டில் முன்னேறும் வீரனாக நடிகர் ராம் சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகவும், அடாவடி பெண்ணாகவும் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் இதில் நடிகர்கள் ஜெகபதி பாபு, சிவராஜ்குமார் மற்றும் திவ்யேந்து ஷர்மா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளார், மேலும் ஹெல்லல்லல்லோ என்ற பாடலில் சிறப்பு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!

பெத்தி படமானது ராம் சரணின் 16வது திரைப்படமாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதனால் மேலும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.