தெலுங்கு சினிமாவில் சிகரமாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் என்ற வீதத்தில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பெத்தி (Peddi). இப்படத்தில் ராம் சரண் ஆக்ஷ்ன் மற்றும் விளையாட்டு வீரனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இப்படமானது ஜான்வி கபூருக்கு 2வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெத்தி படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் எல்லாம் தெறிக்கவிட்டுவருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ஹெல்லல்லல்லோ (Hellallallo) என்ற பாடலில் ராம் சரண், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜான்வி கபூர் என மூவரும் இணைந்து நடனமாடியுள்ளனர் . அந்த வகையில் இப்படத்தின் வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட முக்கிய காட்சி ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட பதிவு இதோ!
No more Hello, From now its #Hellallallo 💃🕺💃❤️🔥#Hellallallo Video Song Out nowhttps://t.co/7dsDkWWuEJ#PEDDI in cinemas worldwide on 4th June.#GetReadyForPeddi 💥💥
Mega Power Star @AlwaysRamCharan @NimmaShivanna #JanhviKapoor @BuchiBabuSana @arrahman @RathnaveluDop… pic.twitter.com/vmfSxMdb2d
— Mythri Movie Makers (@MythriOfficial)
இந்த பெத்தி படத்தில் நடிகர் ராம் சரண், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் ரன்னிங் என ஆள் ரவுண்ட் ஆட்ட நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மலை கிராமத்திலிருந்து, எவ்வாறு ஒரு இளைஞர் தனது விளையாட்டு ஆசையை வைத்து உலகளவில் முன்னேறுகிறார் என்பதை மையமாக கொண்டு இப்படமானது தயாராகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் வெறும் விளையாட்டு மட்டுமில்லாமல், அரசியல், காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகளும் உள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இப்படத்தில் சில பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதி முதல் உலகளவில் கிட்டத்தட்ட 5 மொழிகளில் வெளியாகசிவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திரையரங்குகளிலும் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.