பிழைகளைச் சுட்டிக்காட்டி தவறுகளைக் கண்டிப்போம்…. தவெக ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்…. சிபிஐ வீரபாண்டியன் அதிரடி….!!
SeithiSolai Tamil May 24, 2026 05:48 PM

மக்கள் அளித்த தீர்ப்பினை மதித்து, எந்தவித எதிர்பார்ப்புகளோ அல்லது நிர்பந்தங்களோ இல்லாமல் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மக்கள் தேர்ந்தெடுத்த அந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தொடர்வதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியின் செயல்பாடுகளில் பிழைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவோம் என்றும், தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதைக் கண்டிப்போம் என்றும் தனது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். மதச்சார்பின்மைக்கு எதிராக இந்த ஆட்சி செல்லும்பட்சத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், அப்போதும் கூட ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனை தங்களுக்கு வராது என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி தங்களின் நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளையில், தவறுகளைக் தட்டிக்கேட்கும் ஜனநாயகக் கடமையையும் தொடர்ந்து செய்வோம் என வீரபாண்டியன் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.