கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
ராஜேஷ். எஸ் May 24, 2026 07:44 PM

திருப்பத்தூர் அருகே கத்தி முனையில் பெண்ணிடம் இருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர், பாரஸ்ட் பங்களா என்னும் பகுதியில் வசிக்கும் ராஜதிலகம் (40) என்ற பெண் அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜதிலகம் கோழிகளுக்கு தீவனம் வைக்க கோழி கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் மறைந்து கொண்ட 4 வாலிபர்கள், ராஜதிலகம் அவரது வீட்டின் உள்ளே சென்ற போது மறைந்து இருந்த வாலிபர்கள் அந்த பெண்ணை அசைய விடாமல் இறுக்கி பிடித்து கத்தியை கழுத்தில் வைத்து கத்துனா குத்துவேன் என்று மிரட்டி கழுத்தில் அணிந்து இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் வைத்து இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் பணம் 1.25 லட்சம் என பலவற்றை சுருட்டிக்கொண்டு இருந்த போது அந்த பெண் மயக்கம் அடைந்து உள்ளார். 

அப்போது பயந்து 4 வாலிபர்களும் கழுத்தில் அணிந்து இருந்த மற்றொரு சங்கிலியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து உள்ளனர்.  பின்னர் பயக்கம் தெளிந்த பெண் அவரது கணவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். அவரது கணவர் அகஸ்டின் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சனிக்கிழமை காலை முதல் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்திய போது பாழடைந்த ஃபாரஸ்ட் பங்களா அருகே வண்ணார காளியம்மன் கோவிலில் அமர்ந்து இருந்து விட்டு பின்னர் அருகே உள்ள புளியந்தோப்பில் குடித்து விட்டு அங்கிருந்து கை உரை, முக முடி அணிந்து கொண்டு கையில் ரசாயன பவுடர் எடுத்து கொண்டு சென்று பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து குருசிலாப்பட்டு போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளை அடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.