IPL 2026: மும்பையை வீழ்த்தி ராஜநடை.. பிளே ஆஃப்க்குள் அடியெடுத்து வைத்த ராஜஸ்தான்..!
TV9 Tamil News May 25, 2026 12:48 AM

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 24ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. ஐபிஎல் 2026 சீசனில் இருந்து ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் வெளியேறிய நிலையில், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி ஐபிஎல் 2026 சீசனில் பிளே ஆஃப்க்குள் (IPL 2026 Playoffs) அடியெடுத்து வைத்தது.

ALSO READ: ஒரு முடிவுக்கு காத்திருக்கும் 2 அணிகள்.. டெல்லி vs கொல்கத்தா.. யாருக்கு வாய்ப்பு?

ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடி பேட்டிங்

𝐌𝐚𝐲 the 𝐅𝐨𝐮𝐫𝐭𝐡 be with us! 🔥💗 pic.twitter.com/euZEBbUwle

— Rajasthan Royals (@rajasthanroyals)


இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 ரன்களுக்கும், வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். துருவ் ஜூரலும் 38 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். கேப்டன் ரியான் பராக்கும் 14 ரன்களுக்குள் வெளியேற, ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஜோஃப்ரா ஆர்ச்சர்  15 பந்துகளில் 213.33 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 32 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக, ராஜஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ALSO READ: குவாலிஃபையர் 1ல் மழை எச்சரிக்கை.. மோதும் பெங்களூரு – குஜராத்.. யாருக்கு சாதகம்?

கடைசி நேரத்தில் சொதப்பல்:

206 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் தடுமாறியது. முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை 0 ரன்னிலும், நமன் தீரையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்தார். ரியான் ரிக்கில்டனை 12 ரன்களுக்கு நாந்த்ரே பர்கரால் ஆட்டமிழந்தார். இருப்பினும், சூர்யகுமார் யாதவின் போராடி  60 ரன்கள் எடுக்க, வில் ஜாக்ஸ் 33 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், ராஜஸ்தானின் பந்துவீச்சு காரணமாக, மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளையும், பிரிஜேஷ் ஷர்மா மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.