“தேமுதிக டூ அதிமுக.. இப்போது தவெக!”.. கட்சி தாவலில் 'மீசை' ராஜேந்திரன் அடித்த அதிரடி பல்டி.. பனையூரில் பரபரப்பு..!!!!
SeithiSolai Tamil May 27, 2026 12:48 AM

தமிழக அரசியல் களம் தினந்தோறும் அடுத்தடுத்த மெகா ட்விஸ்ட்களைச் சந்தித்து வரும் நிலையில், பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் ‘மீசை’ ராஜேந்திரன் ஆளும்கட்சியான தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) இணைந்து ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வாயடைக்க வைத்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்த அவர், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த்தைச் சந்தித்து சால்வை அணிவித்து, தன்னை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த காலங்களில் மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தவெக தலைவர் விஜய்யை மிகவும் காரசாரமாகவும், கடுமையான வார்த்தைகளாலும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர் தான் இந்த மீசை ராஜேந்திரன்.

அப்படிப்பட்டவர் இன்று எல்லாவற்றையும் மறந்து திடீரென தவெகவிலேயே தஞ்சம் புகுந்திருப்பது, தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு செம ‘கிளைமாக்ஸ்’ திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இவர் தேமுதிகவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிமுகவின் கூடாரமே காலியாகி வரும் வேளையில், விஜய்யை எதிர்த்த மீசை ராஜேந்திரனும் தவெக பக்கமே சாய்ந்திருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.