IPL 2026: ரஜத் படிதார் அதிரடி 93 ரன்கள்.. குஜராத் அணிக்கு 255 ரன்கள் இலக்கு..!
TV9 Tamil News May 27, 2026 01:48 AM

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) முதல் குவாலிபையர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் சுற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் 255 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்காக கேப்டன் ரஜத் பதிதார் வெறும் 33 பந்துகளில் 93 ரன்களும், விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இதுமட்டுமின்றி, கடைசி 6 ஓவர்களில் ஆர்சிபி 114 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பவர்பிளேயில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி எது? கெத்து காட்டும் சூர்யவன்ஷி!

பந்துவீச்சில் சொதப்பல்:

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இது குஜராத் அணிக்கு பிரச்சனையாகவே முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு பிளேஆஃப் போட்டியிலும் இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. மேலும், ஒரு ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முதலில் பேட்டிங் செய்த வந்த ஆர்சிபி அணியின் வெங்கடேஷ் ஐயர், முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார். இது ஒன்றே அந்த அணியின் நோக்கத்தை வெளிப்படுத்தியது. வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 19 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 43 ரன்கள் எடுத்தார்.

6 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 10 ஓவர்களில் அந்த ஸ்கோர் 99 ரன்களாக மட்டுமே இருந்தது. ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத்தை ஆட்டத்திற்குள் மீண்டும் கொண்டுவரும் நிலைக்குக் கொண்டுவந்தார், ஆனால் பின்னர் க்ருணால் பாண்ட்யா மற்றும் ரஜத் படிதார் பொறுப்பேற்றனர். இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், நிலைபெற்றவுடன் பெரிய ஷாட்களையும் அடித்தனர். க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ALSO READ: எலிமினேட்டர் சுற்றில் மழை எச்சரிக்கை.. மோதும் SRH vs RR.. யாருக்கு சாதகம் இது?

இருப்பினும், கடைசி நேரத்தில் ரஜத் படிதார் குஜராத் பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து துவம்சம் செய்தார். படிதார்ர் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் எடுத்து ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன், ஜிதேஷ் ஷர்மாவும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து, ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.