மனோஜுக்கு இன்னுமே அறிவு வரலையே!... அடுத்த பிரச்சனையில் சிக்கும் முத்து…
CineReporters Tamil June 08, 2026 05:48 PM

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள். 

ரேகாவை சிந்தாமணியின் ஐடியாவின் பேரில் ஐதராபாத்தில் அடைத்து வைத்து இருக்கிறார் அவர் அப்பா. இதனால் சத்யா தன் குடும்பத்திடம் கோபத்தை காட்டுகிறார். ரேகாவுடன் வாழ முடியவில்லை என்றால் நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும். 

நான் செத்து விடுகிறேன் எனக் கூற மீனாவும் அவர் அம்மாவும் அவரை திட்டுகின்றனர். நீ என்ன பேசிட்டு இருக்க அதுக்கு தான் உன்னை இவளோ கஷ்டப்பட்டு வளத்தேனா என்கிறார். மாமாவிடம் சொல்லவா என சத்யா கேட்க மீனா அது மட்டும் செய்யாதே. அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது. ரேகாவை மறந்துடு என்கிறார். 

ஆனாலும் சத்யா நேராக சென்று முத்துவை பார்க்கிறார். ரேகா விஷயத்தை சொல்ல அவர் கோபமாக யோசிக்காமல் அமைதியாக இருக்கிறார். நீ நேராக போய் பேசு என ஐடியா கொடுக்க அவர் பதறுகிறார். 

நான் உன்கூட வரேன். ஆனால் நீ தான் உன் காதலுக்கு பேச வேண்டும் எனவும் கூறுகிறார். முத்து தைரியம் கொடுத்து அழைத்து செல்ல சத்யா உள்ளே சென்று தட்டு தடுமாறி ரேகாவுடனான காதல் விவகாரத்தை சொல்ல அவர் டென்ஷன் ஆகாமல் பொறுமையாக யோசித்து சொல்வதாக சொல்லிவிடுகிறார். 

சத்யாவும் அதை முத்துவிடம் வந்து சொல்ல அவர் உன் முதலாளி நல்லவருடா பொறுமையா வந்து நல்ல விஷயமா சொல்லுவாரு என்கிறார். ரோகிணி ஒரு கார்ப்ரேட் பங்ஷனில் ஜோடியாக கலந்துக்க மனோஜை வர சொல்கிறார். 

கோட் சூட் போட்டுக்கொண்டு அவரும் ரெடியா கிளம்பி செல்ல கதவை திறக்கிறார். ஆனால் மனோஜை இன்னொரு ஃபங்ஷனுக்கு அழைக்கிறார் விஜயா. அங்கு அம்மா மகனுக்கு விருது தருவதாக சொல்ல மனோஜும் ஒன்னும் சொல்ல முடியாமல் கிளம்புகிறார். 

ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிகிறது. அது ரோகிணி அழைத்த அதே பங்ஷன் தான் என்பது. அவரை அங்கு பார்க்கும் விஜயா கோபமாக நிற்கிறார். மனோஜுக்கு நேரம் சரியில்லை போல.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.