“எதிர்த்து நிக்க ஆளே இல்லை” போட்டியின்றி எம்பியாகும் காங்கிரஸ் பிரவீண் சக்கரவர்த்தி…. ஆடிப்போன எதிர்க்கட்சிகள் வட்டாரம்….!!
SeithiSolai Tamil June 08, 2026 08:48 PM

தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி இடத்திற்கான இடைத்தேர்தலில், தவெக (TVK) கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி எவ்வித எதிர்ப்புமின்றிப் போட்டியின்றித் தேர்வாகி மாபெரும் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்பி பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.

​இந்தச் சூழலில், தமிழகத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள அசுர பலத்தைக் கண்டு அஞ்சிய எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக, தவெக கூட்டணி சார்பாகக் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி போட்டியின்றி எம்பியாகத் தேர்வாகியுள்ளார். இந்த அதிரடி வெற்றிச் செய்தி, தற்சமயம் தமிழக அரசியல் களம் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டத்தையும், எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான திக் திக் நிமிடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.