Vikram Prabhu: ரத்த கதையின் தொடக்கம்… அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் புது படத்தில் இணைந்த விக்ரம் பிரபு!
TV9 Tamil News June 24, 2026 12:48 AM

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விக்ரம் பிரபு (Vikram Prabhu). இவர் தமிழ் 80ஸ் நடிகர் பிரபுவின் மகனாவார். இவர் கும்கி (Kumki) படத்தின் முதல் தமிழில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், தற்போது மொத்தம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இவர் இறுதியாக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி (Suresh Rajakumari) இயக்கத்தில், சிறை (Sirai) என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார். இப்படத்தில் விக்ரம் பிரபு, அனிஷிமா அனில்குமார் மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் குமார் இணைந்து நடித்திருந்தார். இப்படம் விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளியான நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு தற்போது தனது 26வது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “VikramPrabhu26” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அப்பா அம்மா ஆயாச்சு… ஹேப்பி நியூஸ் சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா தேஷாபாண்டே!

விக்ரம் பிரபுவின் 26வது திரைப்படத்திற் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவு:

Here we go with a bloody tale 💥

Romeo Pictures presents #VikramPrabhu26

produced by @mynameisraahul @Romeopictures_

So excited to work with my dear brother again @thisisysr @U1Records 🔥

Direction @just_sid_here pic.twitter.com/CULiIMUGX8

— Vikram Prabhu (@iamVikramPrabhu) June 23, 2026

விக்ரம் பிரபுவின் 26வது பட இயக்குநர் யார்:

நடிகர் விக்ரம் பிரபுவின் 26வது படமானது ஆக்ஷன் மற்றும் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தை விக்ரம், தி கோட், துணிவு மற்றும் விஷவாசம் போன்ற படங்களை தயாரித்திருந்த ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

இதையும் படிங்க: எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நடிகை திரிஷா!

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இறுதியாக விக்ரம் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா கம்போ இறுதியாக, கடந்த 2017ம் ஆண்டில் வெளியான சத்ரியன் என்ற படத்தில் இணைந்திருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

விக்ரம் பிரபு 26 பட டைட்டில் அப்டேட்:

இப்படத்திற்கு தற்காலிகமாக VikramPrabhu26 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆக்ஷன் மற்றும் தங்கம் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் பூஜைகளுடன் தொடங்கவுள்ளதாம். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.