இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கீர் ஸ்டார்மர்!
TV9 Tamil News June 24, 2026 03:48 AM

லண்டன், ஜூன் 23 : இங்கிலாந்து பிரதமர் (England President) பதவியை ராஜினாமா செய்தார் கீர் ஸ்டார்மர் (Keir Starmer). இங்கிலாந்தில் ஏற்பட்ட தொடர் சிக்கல்கள் காரணமாக அவருக்கு உட்கட்சி எம்பிக்கள் மத்தியில் செல்வாக்கு குறைய தொடங்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், கீர் ஸ்டார்மர் பதவியை அவர் ராஜினாமா செய்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட தொடர் சிக்கல்கள் – கீர் ஸ்டார்மர் செல்வாக்கு சரிவு

இங்கிலாந்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான், இங்கிலாந்தின் பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவி ஏற்றார். இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து பிரதமராக அவர் ஆட்சி நடத்தி வந்த நிலையில், இங்கிலாந்து பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்தது. குறிப்பாக நாட்டின் பொருளாதார தேக்க நிலை, பணவீக்கம், உதவித்தொகை ரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக, ஆளும் கட்சி எம்பிக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : வார்த்தையை விட்ட ட்ரம்ப்.. வெளியேறிய ஈரான்.. பேச்சுவார்த்தையில் பரபரப்பு!

உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த தொழிலாளர் கட்சி

இங்கிலாந்தில் ஏற்பட்டு வந்த தொடர் சிக்கல்கள் காரணமாக மே மாத நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த சூழலில் தான், தொழிலாளார் கட்சியின் ஸ்டார்மருக்கு மாற்றாக மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பார்க்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தான், ஜூன் 20, 2026 அன்று மேக் கர்பீல்ட் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆண்டி பர்ன்ஹாம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : கொளுத்தி எடுக்கும் வெயில்.. வெப்ப அலையால் திணறும் ஐரோப்பிய நாடுகள்!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டார்மர்

இதனை தொடர்ந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கீர் ஸ்டார்மரை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.