விஜய் டிவியில் தொடங்கிய ஆறு மாதத்திலே முடிவுக்கு வந்த சீரியல்.. அட இதுவா?
TV9 Tamil News June 27, 2026 11:48 PM

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு புகழ்பெற்ற டிவியாக இருப்பதுதான் ஸ்டார் விஜய் (Star Vijay TV). இந்த தொலைக்காட்சியானது கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருகிறது. இந்த டிவியில் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரை தொடேன்ற்து பிரபலமானவை பலவும் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த விதத்தில், விஜய் டிவி மற்றும் சன் டிவி (Sun Tv) இடையே டிஆர்பி ரேட்டிங் மோதல்கள் எப்போதுமே இருந்துவருகிறது. இந்நிலையில் எந்த தொலைக்காட்சி சீரியல் டாப் 5 இடத்தை பிடிக்கும் என போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய 6 மாதத்திலே புது சீரியல் ஒன்று நிறைவடைந்துள்ளது.

தற்போது அந்த சீரியல் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “கனா கண்டேனடி” (Kana Kandenadi) என்ற சீரியல்தான். இது குறித்து ரசிகர்கள் பெர்ம் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!

கனா கண்டேனடி சீரியல் தொடர்பாக வெளியான பதிவு:

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

இந்த கனா கண்டேனடி சீரியலானது, மூன்று பெண் தோழிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டுவந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10:30 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவந்தது. தற்போது இந்த சீரியலானது முடிவடைந்துள்ளதாம். கடந்த 2026ம் ஜனவரி 19ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 121 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகியிருக்கிறது.

இதையும் படிங்க: அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்

இந்நிலையில், தற்போது இந்த சீரியலை சீரியல் குழு நிறைவு செய்துள்ளது. இனிமையான முடிவதன் சீரியலை நிறைவு செய்துள்ளனர். இந்த சீரியயலுக்கு தமிழில் ரசிகர்கள் பலரும் இருக்கும் நிலையில், இந்த சீரியலின் நிறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகிறாராம். தற்போது இது தொடர்பான தகவல்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக காத்திருக்கும் புது சீரியல்கள் :

விஜய் டிவியில் ஏற்கனவே மகாநதி என்ற சீரியல் நிறைவடைந்த நிலையில், அதையடுத்து கனா கண்டேனடி என்ற சீரியலும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேலும் விஜய் டிவியில் “காதல் காதல் காதல்” மற்றும் “ஒண்ணா இருக்க கத்துக்கணும்” என இரு சீரியல்கள் ஒளிபரப்பாக தயாராகியுள்ளது. இதில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற சீரியல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் தினமும் மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.