நீங்க பெத்த புள்ளையா இருந்தாலும் இப்படியா..? “குழந்தையை வச்சிட்டு போற இடமா இது”… உயிரோடு விளையாடிய தந்தை.. பெரும் அதிர்ச்சி…!
SeithiSolai Tamil June 29, 2026 08:48 PM

கர்நாடகாவில் உள்ள கடக் நகரில் ஒரு தந்தை செய்த காரியம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய பைக்கின் லக்கேஜ் பேக்கில் பச்சிளம் குழந்தையை அவர் வைத்து வண்டியை ஓட்டியுள்ளார். குழந்தையின் தலை மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் ஒருவேளை பாரம் தாங்காமல் பை கீழே விழுந்து இருந்தால் குழந்தையின் உயிரே போயிருக்கக் கூடிய அளவுக்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசாரின் கவனத்திற்கு செல்ல அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடித்து அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.