பப்பரப்பா மனோஜுன் இரண்டாவது கல்யாணம்… என்ன சொல்ல போறார் விஜயா?
CineReporters Tamil June 29, 2026 09:48 PM

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

கடந்த சில எபிசோட்டாகவே சத்யாவின் கல்யாண ட்ராக் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சிந்தாமணி பிரச்சனை செய்வதால் கல்யாணத்தை பாட்டியின் வீட்டிலே வைத்து நடத்திவிடலாம் என முடிவு செய்கின்றனர். 

அந்த வகையில் முத்து யாரையெல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிடலாம் எனவும் பேசிக்கொண்டு இருக்கிறார். விஜயா வர மாட்டார் என எல்லாரும் நினைக்க ஏன் அப்படி நினைக்கிற நான் வரேன். இது நம்ம வீட்டு கல்யாணம் என பல்டி அடிக்கிறார். 

எல்லாரும் அதிர்ச்சியாக பார்க்க மீனா குடும்பமும் நம்ம குடும்பம் தானே எனவும் பேசுகிறார். இதில் எல்லாரும் இன்னும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். பின்னர் சிந்தாமணி இந்த திருமணத்தில் அசிங்கப்பட்டு நிற்பதை பார்க்க தான் இந்த பேச்சு என்பதை அவர் மனதில் யோசிக்கும் போதே தெரிகிறது. 

பின்னர் மனோஜ் வந்து மெதுவாக கனகா வீட்டில் சொன்ன கல்யாண கதை குறித்து சொல்ல முதலில் கேள்வியாக பார்த்த குடும்பம் மனோஜின் நோக்கத்தை தெரிந்துக்கொள்ள எல்லாருமே அவரை திட்டுகின்றனர். 

தனக்கு சப்போர்ட் செய்வார் என நினைத்த விஜயா கூட திட்டிவிட்டே செல்கிறார். பின்னர் மீனா அம்மா மற்றும் சீதா இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் திடீரென அருண் வர கோயிலுக்கு போவதாக சொல்லி சமாளிக்கின்றனர். 

தொடர்ந்து அவர் சீதாவிடம் முரட்டு தனமாக நடந்து கொள்வதை நோட் செய்யும் பாட்டி சீதாவுக்கு அட்வைஸ் செய்கிறார். தொடர்ந்து பார்வதி வீட்டிற்கு விஜயா வர அங்கு ரோகிணி இருக்கிறார். இதில் அவர் சத்தம் போட துவங்க விவாகரத்து கொடுத்துவிடுவதாக ரோகிணி சொல்வதுடன் எபிசோட் முடிகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.