விஜய் தொலைக்காட்சியில் குடும்ப சூழலை அப்படியே கதையாக்கி இருக்கும் அழகே அழகு வைரலாகி வரும் நிலையில் இன்றைய எபிசோட் மீண்டும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது.
வீட்டில் பாக்கியராஜ் மற்றும் மலர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நடந்த விஷயங்களை கேட்டு பாக்கியராஜ் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். மதி செய்ததையும் அதற்கு இந்த குடும்பம் ரியாக்ட் செய்ததை சொல்கிறார்.
பின்னர் மதி தன்னிடம் வந்து பேசியதாகவும் ஆனால் தான் முகத்தை திருப்பி கொண்டு போய்விட்டதால் அவள் என்னை என்ன நினைத்து இருப்பாள். இந்த வீட்டில் அவளுக்கு துணையே இல்லைனு நினைத்து இருப்பா என கவலையாகி விடுகிறார்.
அப்போ மாமியார் வந்து நடிப்பை போட பாக்கியராஜை பார்த்ததும் ஓவர் பெர்ஃபாமென்ஸ் செய்கிறார். மேலும், தன்னுடைய மானத்தையே வாங்கிவிட்டதாக சீன் போடுகிறார். தொடர்ந்து ரேவதி வீட்டில் மதி தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து சுரேஷ் அழைத்து வந்துவிட்டதாக சொல்கிறார்.
அவர்கள் குழம்பிவிடுகின்றனர். ரேவதியிடம் சகஜமாக பேச அவரும் பெரிய அளவில் கோபமே படாமல் மதியிடம் சகஜமாக பேசுகிறார். இன்னும் மாமியாரும் மாமனாரும் மதி குறித்து புலம்பி தீர்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
சரியாக மதியின் அப்பா அங்கு வருகிறார். இப்போ அடக்கி வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மாமியார் மீண்டும் எகிறிக்கொண்டு சண்டைக்கு நிற்கிறார். இது தெரிந்தால் மதி அடுத்த ஆட்டத்தை தொடங்கிவிடுவாரே என்ன நடக்க போகுதோ என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.