அடேங்கப்பா..! ரயில் பயணப் பெட்டிகளில் ரூ.104 கோடி தலையணை, போர்வை திருட்டு..!
Top Tamil News July 14, 2026 10:48 AM

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ரயில்களில் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கும் வழக்கம் 2022 ஜனவரி முதல் மீண்டும் தொடங்கியது.

அப்போது முதல் இவ்வாண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நாலரை ஆண்டுகளில் ரயில்களில் திருட்டுபோன போர்வை, தலையணை பற்றிய விவரங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில் அடங்கியுள்ளன.

மொத்தமுள்ள 18 ரயில்வே கோட்டங்களில் 16ன் 54 பிரிவுகளிடமிருந்து த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் பெற்றது.

நாடு முழுவதும் இந்தியன் ரயில்வேக்குச் சொந்தமான ரயில்களின் குளுகுளு ஏசி பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை, தலையணை உறை, முகம் துடைக்கும் துண்டு ஆகியன வழங்கப்படுகின்றன.

அவற்றைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் ரயில் பெட்டியிலேயே வைத்துவிட வேண்டும். ஆனால், ஆயிரத்தில் ஒரு பயணி அந்தப் பொருள்களில் குறைந்தபட்சம் ஒன்றைத் தம்முடன் எடுத்துச் சென்றுவிடுவது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நான்கு ஆண்டுகளில் மட்டும் 1.27 கோடிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

அதன் மூலம், அத்தகைய துணிகளைத் தயாரித்து வழங்கும் குத்தகையாளர்களுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.