ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், இந்தியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த மத்திய அரசு, புதிய இலவச ஏஐ ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது YUVA AI என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்களை வேலைவாய்ப்பிற்குத் தயார்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும் இந்தப் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும். குறிப்பாக ஏஐ என்றால் என்ன, எப்படி வேலை செய்கிறது எதற்கு பயன்படுகிறது, இந்த தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்துவது எப்படி, இதன் வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இந்த பயிற்சியில் கற்றுத் தரப்படும்.
எழுதப் படிக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேரலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பணிபுரிவோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் எவரும் இதில் இணைந்து பயன்பெறலாம். இந்தப் பயிற்சியை முடிக்க மொத்தம் 4.5 மணி நேரம் ஆகும்.
ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் முழுப் பாடத்திட்டங்களையும் படித்து முடித்த பின், சிறிய தேர்வு நடத்தப்படும். அதனை வெற்றிகரமாக முடித்தவுடன், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியில் சேர கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
எவ்வித முன் அனுபவமும் இன்றி இலவசமாகக் கற்றுக்கொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பு, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.