Rasi Palan Today (27-07-2026): திங்கட்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் July 27, 2026 09:14 AM

ஜூலை மாதம் 27ம் தேதி திங்கட்கிழமையான இன்று ஆடி மாதம் 11ம் நாளாகும். வளர்பிறை திரயோதசி திதியுடன் கூட இந்நாள் வாஸ்து நாளாக அமைந்துள்ளது. இன்றைய நாளில் பகல் 12.34 மணி வரை மூலம் நட்சத்திரமும், அதன்பின் பூராடம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய நாளில் ராசிபலன்கள் பற்றி காணலாம். 

ஜூலை 27 ராசிபலன்கள்

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும்.

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்று தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தாயாருடன் சிறு சிறு  விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்.

இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகளை வெற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

மறுசுழற்சி சார்ந்த பொருட்கள் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மறைவான சில பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.