கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக டிசி படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் 7-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது டோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளார். இது அல்லு அர்ஜுனின் 23-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது புது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
லோகேஷ் – அல்லு அர்ஜுனின் படத்தில் நாயகிக்கு முக்கியதுவம் இல்லையா?இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘AA 23’ திரைப்படத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களின் பாணியிலேயே இப்படம் அமையும் என்றும், இதில் பெண் கதாபாத்திரத்தை விட கதை மற்றும் அதிரடிச் காட்சிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… OM Movie: அலாக்கா லோவா… தனுஷின் ஓம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியானது!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:Buzz: It is being reported that in director #LokeshKanagaraj‘s upcoming film #AA23, starring #AlluArjun, the heroine’s role will not have major importance. According to the buzz, the film is expected to be similar in style to Kaithi and Vikram, with the primary focus on the story… pic.twitter.com/SRQWdVm8kn
— Movie Tamil (@_MovieTamil) July 27, 2026
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படிதான் இருக்கும் – இயக்குநர் ஓபன் டாக்