சமூகவலைதளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அலாக்கா லோவா பாடல்
TV9 Tamil News July 29, 2026 04:48 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து இருந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பலப் படங்கள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக கர படம் திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அடுத்ததாக ஓம் படம் வெளியாக உள்ளது.

கர படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்தார் நடிகர் தனுஷ். இவர்களின் கூட்டணியில் உருவான இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அலாக்கா லோவா பாடல்:

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான அலாக்கா லோவா பாடல் நேற்று நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த ஓம் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இதனை தற்போது படக்குழு கொண்டாடி வருகின்றது.

Also Read… நஸ்லேனின் அடுத்தப் பட இயக்குநர் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

It’s a banger – no doubts 💥

25M+ cumulative views for #OM First Single Alaakaa Loova !

Tamil: https://t.co/SD6KdldsCC
Telugu: https://t.co/ghej5pVgrb
Hindi: https://t.co/fIWwNUVfsM

A smashing start to the album, from @SaiAbhyankkar 🔥@dhanushkraja @mammukka @Rajkumar_KP… pic.twitter.com/rZ0SuU6Gdy

— Wunderbar Films (@wunderbarfilms) July 29, 2026

Also Read… மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு – இயக்குநருக்கு நோட்டீஸ்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.