மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சுகுமாறன் July 29, 2026 07:44 PM

ஹாலிவுட் திரையுலகில் மார்வெல் திரைப்படங்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. மார்வெல் கதாபாத்திரங்களில் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு என்று உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் ஸ்பைடர் மேன் ரசிகர்கள் உள்ளனர்.

ப்ராண்ட் நியூ டே:

இந்த நிலையில், ஸ்பைடர் மேன் படத்தின் புதிய பாகமாக ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியூ டே திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இதனால் மார்வெல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்தாண்டு இறுதியில் ஒட்டுமொத்த மார்வெல் கதாபாத்திரங்களும் நடித்துள்ள அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே வெளியாக உள்ள நிலையில் இந்த படம் வெளியாகிறது. இதனால், இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்பைடர் மேன் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் டாம் ஹாலண்டே இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். ஜெண்டயா அவருக்கு ஜோடியாக இந்த படத்திலும் தொடர்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களான ஜேக்கப் பதலோன், மைக்கேல் மண்டோ, மார்க் ரஃபலோ ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

இந்த படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார். இவர் மார்வெல் நிறுவனத்தின் ஷாங் ஜி மற்றும் லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ் ஆகிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தை இயக்கியுள்ளார். டூம்ஸ் டே படத்திற்கான போஸ்ட் கிரிடிட் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறும் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும், ஸ்பைடர் மேன் படத்தின் கடைசி பாகமாக கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் நோவே ஹோம் படத்தில் ஸ்பைடர் மேன் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக அவர்கள் அனைத்தையும் மறக்கவைத்துவிடுவார். அதன் தொடர்ச்சியாக இந்த படம் இருப்பதால் இதன் மீது தனி எதிரபார்ப்பு உள்ளது. டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக நடித்துள்ள 4வது திரைப்படம் இதுவாகும்.

நாளை வெளியாக உள்ள ஸ்பைடர்மேன் படத்தில் பீட்டர் பார்க்கரான ஸ்பைடர்மேனை அவரது காதலியும், நண்பர்களும் முற்றிலும் யாரென்று மறந்த நிலையில் மீண்டும் ஸ்பைடர்மேன் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையில் அந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? தனது காதலி, நண்பர்களுடன் எப்படி மீண்டும் இணைகிறார்? என்பதே கதைக்களம் ஆகும். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.