முதல்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சியான் 63 படக்குழு
TV9 Tamil News July 29, 2026 06:48 PM

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கலிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் தனக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். பான் இந்திய மொழிகளில் ஒரு நாயகனை பிடித்தால் மற்றொருவரை பிடிக்காது என்று தொடர்ந்து சண்டையிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள் ரசிகர்கள். அப்படி ரசிகர்களால் ஒரு சில நடிகர்கள் வெறுப்பை அனுபவிப்பது வழக்கம்.

இப்படி இருக்கு நிலையில் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர் விக்ரமிற்கு அவரை பிடிக்காதவகள் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் 63-வது படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

முதல்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்தது சியான் 63 படக்குழு:

அதன்படி நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் 63-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர்கள் ரியா ஷிபு, ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் குறித்து தற்போது வெளியான தகவலின்படி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read… Train: விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட சண்டை காட்சி BTS வீடியோ வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

The first schedule of #Chiyaan63 has been completed successfully. According to reports, the footage shot so far has turned out exceptionally well.

The second schedule of filming is expected to begin soon, and the team is currently gearing up for the next phase of production. pic.twitter.com/XPykETeJov

— Movie Tamil (@_MovieTamil) July 29, 2026

Also Read… ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை… உறுதி செய்த படக்குழு!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.