Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
க.சே.ரமணி பிரபா தேவி July 29, 2026 06:14 PM

தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், ’’தமிழ்நாடு முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதிநீர் விவகாரம் தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.