CM Vijay Car Car For MLA: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார்களுக்கான எரிபொருல் செலவு போன்றவற்றிற்கும் அரசு நிதியளிக்கும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், “கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், பல எம்.எல்.ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதி பணிகளை ஆய்வு செய்ய கடினமாக உள்ளதாகவும் கூறியிருந்தார். லஞ்சமில்லாத நேர்மையான் ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார். எந்தவொரு பொருளாதார பலமும் இன்றி சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றுபவர்கள் தங்களது தொகுதி பணிகளை மேற்கொள்ள வாகனங்களையோ, உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். இதுதொடர்பாக பல கோரிக்கைகளும் எழுந்தன. பண பலம், அரசியல் பலம் இன்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் தலைமுறை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின் போது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மக்கள் பணியினை செய்திட உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி மக்கள் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தொய்வின்றி மேற்கொள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணத்திற்கு பிறரை சாராமல் இருந்து, எந்தவித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும். சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமைகளை குறைத்து, கடைக்கோடி மக்களுக்கு நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை வழங்க உதவும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள, ஒரு உதவியாளரை நியமிப்பது அவசியம் என கருதப்படுகிறது. எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்க உள்ள காரை பராமரிக்கும் விதமாக வாகனத்திற்கு ஓட்டுனர், எரிபொருள், வாகன பராமரிப்பு செலவினங்களுக்காக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப்படியாகவும், அலுவலக பணிகளில் உதவி செய்திட ஒரு உதவியாளரை நியமிக்க 25 ஆயிரம் ரூபாய் உதவிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கிறேன். இதற்கான உரிய சட்ட சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும்” என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தங்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய கொள்ள முடியாத நிலையில் தான், லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவை மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதனை தடுக்கு விதமாக, அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, மக்களுக்கு நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை வழங்கும் நோக்கிலேயே முதலமைச்சர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளாராம். அதவாது உங்களை நான் கவனித்துக்கொள்கிறேன், மக்களை நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள், லஞ்சத்தை தவிருங்கள் என்பதே முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு காரணமாம்.