Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
சுகுமாறன் August 22, 2026 10:44 PM

இந்திய திரையுலகின் இசை ஜாம்பவான் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவிற்கு என்று உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அனிருத், சாய் அபயங்கள் என எத்தனையோ இளம் ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் அவரது இசையை இன்றும் ஒலிக்காத வீடுகள் இல்லை.

டோரோதி:

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். ரஜினிகாந்த், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்களை இயக்கியுள்ள இவர் புதியதாக இயக்கும் திரைப்படம் டோரோதி. 80 காலகட்டத்தில் நடப்பது போல உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

80-ஸ் குத்து பாட்டு கல்யாண விருந்து:

இந்த நிலையில், இந்த படத்தின் கல்யாண விருந்து இன்று வெளியாகியுள்ளது. 80 காலகட்டத்தையும், அதன் இசையையும் கண் முன் கொண்டு வருவது போல இந்த பாடலின் இசையும், வரிகளும் உள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு காதுக்கு இரைச்சல் இல்லாமல் ஒரு குத்து பாட்டை ரசிகர்கள் கேட்கின்றனர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பாடியுள்ளார். அவருடன் இணைந்து அந்தோணி தாசன், ப்ரியா ஜெர்சனும் பாடியுள்ளனர். இந்த பாடலை இளையராஜாவே எழுதியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது.

எதிர்பார்ப்பு:

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான கதையை கார்த்திக் சுப்பராஜ், சரவணன் சந்திரன் எழுதியுள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்த கல்யாண விருந்து பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இவர் கடைசியாக இயக்கிய ரெட்ரோ படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த சூழலில், இந்த படம் கார்த்திக் சுப்பராஜுக்கு கம்பேக் தருமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.