அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
கு. அஜ்மல்கான் August 23, 2026 01:14 PM

திமுகவினர் சட்டமன்றத்தில் கூச்சல்

தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது எத்தனை அறிவிப்புகள் இடம்பெறப்போகிறது.? எந்த எந்த கோயில்களில் முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தார். எனவே அரசு ரகசியம் எப்படி வெளியே சென்றது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,  ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்றத்தில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் நீக்குவது மரபு,

கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள் இந்த ஆட்சியில் ஜனநாயகம் முக்கிய பங்காற்றுகிறது என்பதால் இதுபோன்று நேரிடுகிறது. சபாநாயகர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.  திமுக காரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரீல்ஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டமன்றத்தில் வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம், ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளில் பேசுவது சட்டமன்றத்தை சந்தை நடத்தும் இடமாக செயல்பட்டு வருகிறார்கள், 

திமுகவினருக்கு மாண்பு இல்லை

அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும், நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை, முதல்வர் அவர்களை நம்பி வந்தவர்கள் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுவார், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் சிதலமடைந்த கோவில்களை புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

சட்டப்பேரவையில் ஒரு சில அமைச்சர்கள் மட்டும் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழும்போது அனைத்து அமைச்சர்களும் பதில் சொல்வதில் என்ன தவறு, எதிர் கருத்துக்கள் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மற்றவர்களை யார் பேசவேண்டாம் என சொல்வது. இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு, நள்ளிரவு 12 மணியிலிருந்து திட்டமிட்டு பல்வேறு பொய் பிரச்சாரங்களை திமுகவினர் வருகின்றனர்.

பொய் பிரச்சாரம் செய்யும் திமுக

அன்பில் மாரியம்மன் கோவிலில் அம்மை பாதிக்கப்பட்டவர்களை தங்குவது மற்றவர்களுக்கு நோய் பரவாதா எனவும் திமுக ஐடி சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பிவருகின்றனர். அந்தத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முழுமையாக தெரியாமல் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் தாங்கள் செய்த தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயம் இருப்பதால் தான் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள், அந்த பயம் தான் எங்களது ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி. அறிவிப்புகள் வெளியானதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

விளம்பரத்திற்காக திமுக அறிவிப்புகள்

திமுக தேர்தல் அறிவிப்பில் விளம்பரத்திற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள், திருச்செந்தூர் ஆய்வுக்குப் பிறகு 90 சதவீதம் மாறிவிட்டது வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது, அதனை கையாள்வது என்பது கடினமாகிவிட்டது,  பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்து வருவது ஆங்காங்கே நடைபெறுகிறது, 100 நாட்களுக்குள் தலைகீழாக மாற்றிவிட இது ஒன்றும் சினிமா கிடையாது ஆங்காங்கே ஒன்று இரண்டு நடந்து வருகிறது, தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 50க்கும் மேற்பட்ட அனைத்து முதல்நிலை கோவில்களில் மொபைல் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டு மொபைல் வைத்துவிட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, சமூக வலைத்தளங்களில் கோவில் கருவறைகள் எடுத்து வீடியோவாக வெளியிடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பை பொதுமக்கள் தயவுசெய்து திருக்கோவில் நலன்கருதி பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.. 

கோயில்களில் செல்போன் அனுமதி இல்லை

திருப்பதி கோவிலில் லக்கேஜ் மற்றும் செல்போன்களை மொபைல் கவுண்டரில் மற்றும் பாதுகாப்பு அறைகளில் வைத்துவிட்டு செல்லும்போது, 12 மணி நேரம் 16 மணி நேரம் ஆகும்போது அமைதியாக இருக்கிறோம் மக்களும் அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள், அதுபோல தமிழகத்திலும் உள்ள கோவில்களில் இது நடைமுறை கொண்டுவரப்படும், மனநிறையுடன் சாமிதரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்பதற்காக செய்கிறோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.