ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. iPhone Duo மாடல் மொபைல் மூலம் அந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் புரட்சி செய்துள்ளது.
ஐபோன் டியோ எனப் பெயரிடப்பட்ட இந்த மடிக்கக்கூடிய ஐபோன் இரண்டு கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலானது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய மொபைல் இயங்குதளமான A20 ப்ரோ சிப்செட் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18 ப்ரோமேக்ஸ் ஆகியவற்றிலும் பிராசசர் சாஃப்ட்வேராக செயல்படுகிறது.
இந்த மடிக்கக்கூடிய ஐபோனில் பின்பக்க கேமரா 48 மெகாபிக்சல் கொண்டதாகவும், இரண்டு கேமராக்கள் இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாக மடிக்கக்கூடிய இடத்திலும் செல்ஃபி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோனானது மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது.
256GB சேமிப்புத்திறன் கொண்ட ஐபோன் டியோவின் அடிப்படை விலை சந்தையில் இந்திய மதிப்பில் ரூ.1.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய போனில் 2TB வரையிலான மெமரியும் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 16 முதல் முன்பதிவு செய்யப்படும் என்றும், அக்டோபர் 23 அன்று விற்பனைக்கு கொண்டு வரவும் என அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 256 GB மெமரித்திறன் கொண்ட ஐபோன் டியோவின் அடிப்படை மாடலின் விலை ரூ.2,99,900-இல் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் 512 GB, 1 TB மற்றும் 2 TB மாடல்களின் விலை முறையே ரூ. 3,24,900, ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஐபோன் டியோ ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய கலர்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் டியோ மாடலானது உலகளவில் eSIM அமைப்புடன் விற்பனைக்கு வரவுள்ளது. அதேசமயம் 7.6-அங்குல சூப்பர் ரெட்டினா XDR மடிக்கக்கூடிய திரை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் வெளியான ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மாடல் திரை 6.3 அங்குலம் மட்டுமே இருந்தது. அதைவிட 80 சதவிகிதம் பெரிய திரை இந்த டியோ மாடலில் இடம்பெறுகிறது. பிரத்யேக நானோ டெக்ஸ்சர் பூச்சு கொடுக்கப்பட்டு நடுவில் தெரியும் மடிப்புகளை குறைத்து காட்டும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபோனால் 4K/120 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திரை பயன்பாட்டுடன் 22 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்கும் வகையில் இந்த மாடல் இருக்கும் எனவும், 5 நிமிட சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணி நேரம் வரை வீடியோ பார்க்க முடியும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. iOS 27 ஓஎஸ் இயங்குதளம் இடம்பெற்றூள்ளது. இதன்மூலம் ஸ்ப்ளிட் வியூ, செயலிகளை இணைத்து ஸ்வைப் செய்வது, பகுதியளவு மடித்துப் பயன்படுத்தும் வசதி, மற்றும் ஃபோன் சார்ஜ் இல்லாதபோதும் ஸ்டாண்ட்பை பயன்முறையில் நுழைவது போன்றவை செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.