ஆவணி மாதத்தின் 27ம் தேதியான செப்டம்பர் மாதத்தின் 13ம் நாள் ஞாயிற்றுக்கிழமையான இன்று சுபமுகூர்த்த தினமாகும். இன்றைய நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.
தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். மனதில் உத்தியோக தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அப்பாவிற்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும்.
குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களின் ஆலோசனைகளால் சிக்கல்கள் குறையும். உறவுகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகள் மேம்படும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும்.
சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். கூட்டாளிகளிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தந்திரமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இடமாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும்.
செயல்களில் இருந்த தாமதங்கள் நீங்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஆதாயம் கிடைக்கும்.
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வியாபார தொடர்பான பயணங்கள் கைகூடும். பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும்.
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும். சிறு வார்த்தைகள் கூட மனக்கசப்பை ஏற்படுத்தலாம். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.
விரும்பிய காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.