iPhone Duo: ரூ.2.99 லட்சத்தில் ஆப்பிள் ஐபோன் அறிமுகம்.. அந்த பணத்தில் இந்தியாவில் என்னென்ன வாங்கலாம்?
பேச்சி ஆவுடையப்பன் September 10, 2026 04:14 PM

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நிலையில் அதன் விலை வாயைப் பிளக்க வைத்துள்ளது. இந்த விலையில் என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். 

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனான ஐபோன் டியோ நேற்று அறிமுகமானது. இந்திய சந்தையில் 256 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் விலை ரூ.2,99,900 என்ற ஆரம்ப விலையில் தொடங்குகிறது. இதில் 516 ஜிபி, 1 டிபி, 2 டிபி என மெமரி திறனுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 டிபி மாடல் 4,49,900 ஆக விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் என்றாலே அது விலை அதிகமானது என அனைவரும் அறிந்தாலும் அந்த பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். 

ஆனால் இந்த ஐபோன் டியோவின் விலை அந்த ஆப்பிளின் ஆதரவாளர்களையே சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலைக்கு இந்தியாவில் நம்மால் பல பொருட்களை வாங்க முடியும். நீங்கள் வாங்கும் மாடலைப் பொறுத்து, அதே தொகைக்கு ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு பயன்படுத்தப்பட்ட கார், பல மடிக்கணினிகள், ஒரு உயர்நிலை கேமிங் சாதனம், தங்கம் அல்லது ஒரு சர்வதேச பயணம் கூட மேற்கொள்ள முடியும். ஆப்பிள் டியோ போனின் அடிப்படை விலை ரூ.3 லட்சம் என வைத்துக் கொள்ளலாம்.

அதே பட்ஜெட்டில் துபாய், தாய்லாந்து அல்லது ஐரோப்பாவின் சில பகுதிகள் போன்ற இடங்களுக்கு விமானப் பயணங்கள், ஹோட்டல்கள், சுற்றிப்பார்த்தல் மற்றும் இதர செலவுகளை ரூ.3 லட்சத்தில் இருவர் அனுபவிக்க முடியும். அந்தப் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்து தற்போதைய தங்க விலையில்,  22 காரட் தங்கம் சுமார் 22 கிராம் வாங்க முடியும்.  அன்றைய விலை, ஜிஎஸ்டி மற்றும் நகைகளைப் பொறுத்து அதன் அளவு மாறுபடலாம். 

ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்க ரூ.3 லட்சம் செலவழிப்பதை விட ஒரு பிரீமியம் கம்யூட்டர் அல்லது  நல்ல பைக் ஒன்றை வாங்கலாம்.  யமஹா, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு போன்ற பிராண்டுகளின் தேர்வுகள் இந்த பட்ஜெட்டிற்குள் அமையும். அதேசமயம் இதே பட்ஜெட்டில் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்க முடியும். மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ போன்ற மாடலில் நல்ல கார்கள் கிடைக்கும். அதேசமயம் இந்த விற்பனை விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் மாடலான மேக்புக் ஏர் 3 வாங்கலாம். அல்லது மற்ற நிறுவன மாடல்களில் பல லேப்டாப்களை வாங்க முடியும். 

அதேசமயம் வீட்டில் ஒரு 4கே டிவி, பிரீமியம் சவுண்ட்பார் அல்லது சரவுண்ட்-சவுண்ட் சிஸ்டம், கேமிங் கன்சோல் போன்றவை வாங்கி விடலாம். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.