தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. ஆனால் தனித்து போட்டியிட்ட தவெகவிடம் திமுக தோல்வி அடைந்தது. அதே நேரம் தவெகவிற்கு தனிப்பெருமை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெக அணியில் இணைந்தது. மேலும் அமைச்சரவையில் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவகவில் இணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாட்டை திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அவர் பேசுகையில்,
இன்று பதவி, பவுசுக்காக கூட்டணி மாறியதாக, வன்மத்தை கக்குகிறார்கள். பதவி தான் முக்கியம் என்றால், நான் 10 ஆண்டுகள் தேர்தல் அரசியலை முன்னெடுக்கின்றது கற்க மாட்டேன். தேர்தல் அரசியலுக்கு எப்படி வந்தோம் என்றால், கலைஞர் முதல்வராக இருந்த போது தேர்தலில் பாமக, திமுகவோடு கூட்டணி அமைக்க, விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் மீது அப்போது காவல் துறை பாமக சொல்வதை வைத்து வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஒரு வழக்கு, இரண்டு வழக்கை வைத்து கடலூர் போன்ற மாவட்டங்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தான் மைய குழுவை கூட்டி, தேர்தல் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விவாதித்தோம். வாக்களிக்கும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். யாருக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்ல வேண்டும் என்று தான் அரசியலிக்கு வந்து முதலில் தனித்து போட்டியிட்டோம். ஒரு திரை கதாநாயகனா இருந்திருந்தால், தலித் அல்லாத வராக இருந்திருந்தால் தூக்கி கொண்டாடிய இருப்பார்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்ற தொகுதி கேட்டபோது, மறுக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக கூட்டணியில் இருந்து விலகி, சிதம்பரத்தில் போட்டியிட்டேன்.
2024 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. ஆனால் நான் கூட்டணி உடைய விடமாட்டேன் என்று வெளிப்படையாக சொன்னேன். நம்மோடு இருந்த ஆதல் ஆர்ஜூனா கூட்டத்தில் பேசினார். அடுத்த முதல்வர் திருமாவளவன் தான் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என சொன்னார்.
மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கூட்டணியில் இருந்து வெளியில் வாருங்கள் என்று சொன்னார். ஆனால் நான் இந்த காரணத்திற்காக கூட்டணியை விட்டு வெளியே வரமாட்டேன் என்று மறுதலித்தேன். விஜய் அரசியல் கட்சி தொடங்காத காலத்திலே நான் திமுக கூட்டணி விடாது வரமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். திமுக கூட்டணியை கட்டி காப்பதில் உறுதியாக இருந்தேன். பலர் ஆசைவார்த்தை காட்டி, தூதூ அனுப்பினார்கள். இதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறவில்லை.
கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். காங்கிரஸ் கட்சியோடு நீண்ட நாட்களாக உளவியல் மோதலை வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு சமயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள். புதியதாக ஒரு கட்சியை கொண்டு வந்து, கூடுதலாக சீட் கொடுத்தால், மற்றவர்கள் சந்தோஷப்படுவாராகளா? நாம் தோற்றாலும் ஒன்றாக இருப்போம் என்றே சொல்லவில்லை. அதை கூட்டணி தலைமை செய்யவில்லை.
திமுகவோடு காங்கிரஸ் உறவு நல்லிணக்கமாக இல்லை. பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் போனதுமே நாமே போயிருப்பேன். விஜயே கூப்பிட்டார். நீங்களே வாருங்கள். அமைச்சராகுங்கள் என்று சொன்னார். நான் மறுதலித்தேன். கம்யூனிஸ்ட்கள் அறிவித்த போதே சொல்லியிருப்பேன். வெளியில் இருந்துதான் ஆதரவு ஒன்று சொன்னேன். ஆனால் 19 நாட்களுக்கு பிறகு என்ன நடந்தது. நீங்கள் கொள்கை பிடிப்போடு இருப்பீர்கள் என்பதற்காக, ஒரு எளியவன் அமைச்சரானால் தடுக்க கூடாது என்று என் உள்மனம் சொன்னது. அதனால் அந்த முடிவை எடுத்தேன்.
என்னோடு 30 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த தம்பிக்கு அமைச்சர் பதவி கொடுத்தேன். வன்னியரசை அழைத்து, உனக்கு ஆசை இருக்கா என்று கேட்டேன். உங்கள் விருப்பம் என்று சொன்னார். அதன் பிறகுகே திருமாவளவனை நம்பிய தம்பி 10 நாளாவது அமைச்சராக இருக்கட்டும் என முடிவெடுத்தேன். விசிக கூடாரம் காலி என்று சொன்னார்கள். விசிகவினர் விஜய் பின்னாடி சென்றுவிட்டார்கள் என்று பரப்பினார்கள். அட அர்ப்பர்களே உள்ளுந்தூர் பேட்டை கூட்டத்தை நடத்தவே முடியவில்லை. வந்தது 25 சதவீதம் தான். வெளியே இருந்த கூட்டம் வந்திருந்தால், பலபேர் செத்திருப்பார்கள்.
ஜென்சி, ஜென்சி என்று சொல்கிறீர்கள். இன்று விசிக ஜென்சி கூட்டமாக இருக்கிறது.எங்களை திமுக தான் கைவிட்டது. பலியிடும் போது வெளியே வந்ததா தான் ஆடு பாதுகாப்பாக இருக்கும். கதவை முழுவதும் திறந்து வைத்துவிட்டால், ஆடுகள் வெளியே தானே போகும். பிடித்து வைக்கும் திறன் இல்லை , இதை ஏன் புரிந்துக் கொள்ளவில்லை. விசிக, காங்கிரஸ், இடது சாரிகள் வெளியேறியது திமுக தான் காரணம். தவெகவை சுட்டி காட்ட முடியாது. திமுக அனுகுமுறை தான் காரணம். கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போடச் சொன்னேன். ஆனால் செய்யவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.