Rasi Palan Today (11-09-2026): இன்று மிதுனத்துக்கு சிக்கல்.. அப்ப உங்களுக்கு? .. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் September 11, 2026 09:14 AM

செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று ஆவணி மாதத்தின் 25ம் நாளாகும். வளர்பிறை பிரதமை திதியுடன் கூடிய இந்நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களை நாம் காணலாம். 

இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 11)

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் தெளிவுகள் மேம்படும். அரசு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாபாரத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பணிகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாசனைத் திரவிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விஷயங்கள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும்.

பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.

புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.

சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். புதுவிதமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் விமர்சனக் கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை குறித்து சிந்திப்பீர்கள். அரசு பணிகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.

பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்விப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தன வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும்.

மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும்.

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். கால்நடை பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.