ஒரே நாளில் சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்தது.! வெள்ளி விலையும் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ...
கு. அஜ்மல்கான் September 11, 2026 12:14 PM

போட்டி போட்டு தங்கம் வாங்கும் மக்கள்

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஆகஸ்ட் 8-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கும் 1,120 ரூபாய் உயர்ந்து 1.14.160 ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 9-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 ரூபாய்க்கும், சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 1,13,160  ரூபாய்க்கு விற்பனை.
  • ஆகஸ்ட் 10-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 14,255 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து 1,14,040 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 14,015 ரூபாய்க்கும், சவரனுக்கு 1920 ரூபாய் சரிந்து 1,12,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.