LIVE | Kerala Lottery Result Today (11.09.2026): கேரளா லாட்டரி குலுக்கலில் இன்று கோடிகளை அள்ளப்போவது யார்?
க.சே.ரமணி பிரபா தேவி September 11, 2026 04:14 PM

கேரளா லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் தினசரி பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் தொடங்குகிறது. கேரள லாட்டரித் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் இயந்திரம் மூலம் இக்குலுக்கல் நடத்தப்பட உள்ளது. 

பரிசுத்தொகை எப்படி?

தினசரி லாட்டரி குலுக்கலில் பொதுவாக முதல் பரிசு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் என வழங்கப்படுகிறது. 9ஆம் பரிசு ரூ.100 வரை அடுத்தடுத்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பல நேரங்களில் லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள்தான் வெற்றி பெற்றோம் என்றே தெரியாமல் இருப்பார்கள் அல்லது டிக்கெட்டை தொலைத்திருப்பார்கள். இப்படி உரிமை கோரப்படாத பல நூறு கோடி ரூபாய் என்னவாகும் தெரியுமா? அந்தப் பணம் முழுமையாக அரசு கருவூலத்திற்குத் திரும்பச் சென்று, 'காருண்யா' போன்ற திட்டங்கள் வாயிலாக ஏழை மக்களின் இலவச மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கேரள மாநில லாட்டரித் துறையின் காருண்யா லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.11) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டால், அந்த முழு தொகையும் அப்படியே கையில் கிடைக்காது. வருமான வரி (30%), லாட்டரி ஏஜென்ட் கமிஷன் (10%) போன்ற வரிகள் பிடித்தம் போக மீதமுள்ள தொகை மட்டுமே வெற்றியாளருக்குக் கிடைக்கும்.

இந்த லாட்டரி திட்டம் வெறும் லாப நோக்கம் கொண்டது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் குடும்பங்களை வாழ வைக்கும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

இன்று பிற்பகல் குலுக்கல் நிறைவடைந்தவுடன், அதிகாரப்பூர்வ முடிவுகள் கேரள லாட்டரித் துறையின் இணையதளங்களான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteries.com ஆகியவற்றில் வெளியிடப்படும். பரிசு முடிவுகளை இங்கே இணைந்தும் அறியலாம். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.