தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தினந்தோறும் அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் ஆளுங்கட்சியான திமுகவினரை குறிவைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய்யை பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், எதிர்கட்சி தலைவர் உதயநித என அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை கைது செய்ய திட்டமிட்டுள்ளது தவெக அரசு. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகியான ஜெகதீஸ்வரி என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் அவர்களை த.வெ.க கட்சியின் தலைவரும் முதலமைச்ருமான ஜோசப் விஜய் அவர்கள் கேலி செய்ததாக தவறான தகவலை எதிர்கட்சியான தி.மு.க வினர் கடந்த 12.09.2026-ம் தேதி முதலமைச்சருக் கெதிரான கண்டன ஆர்பாட்டத்தை தி.மு.க வின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுக சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர் பாபு தலைமை ஏற்று நடத்தினார்.
சேகர் பாபு பேசியதை தூரத்திலிருந்து ஜெகதீஸ்வரி கேட்டதாகவும், அப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களையும் ஓடுகாளி நாயே என்று அசிங்கமாகவும் அநாகரிமாகவும் பேசியும் கோழை , சங்கி, தைரியமற்ற போன்ற வார்தைகளை பயன்படுத்தி பேசியதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க தொண்டர்களிடம் மனக்குமுறலை விளைவிக்கும் நோக்கிலும் கரூரில் 41 பேர் இறந்தவுடன் முதலமைச்சர் ஓடி ஒளிந்ததாகவும் எட்டு நாட்கள் கழித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பேசியதாகவும் அவரை தனி நபர் அவமானம் செய்துள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களை ஆர் எஸ் எஸ் டவுசர் பார்ட்டி என தரக் குறைவாக பேசுவதின் மூலம் பா.ஜ.க விற்கும் தி.மு.க தொண்டர்களுக்கிடையே கலவர பகை மூட்டி பொது அமைதியைக் சீர்குலைக்கும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு மேல் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீது முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.