அதிர்ச்சி... பெண் விமானப்படை அதிகாரியை பலாத்காரம் செய்த விங் கமாண்டர்!
Dinamaalai September 13, 2024 12:48 PM

கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை சம்பவம் ஏற்படுத்திய சோகம் தீரும் முன்பே நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்து அதிர செய்கின்றன.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து அதிர வைத்தவர், புனேயில் 7, 8 வயசு கூட நிரம்பாத பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த அதே பள்ளி ஊழியர், நர்ஸிங் கல்லூரி முடித்து வீடு திரும்பிய பெண்ணை பலாத்காரம் செய்து நடுரோட்டில் தூக்கி வீசிச் சென்ற கயவர்கள் என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விடிவே கிடையாதா என்று கதற செய்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர், விங் கமாண்டர் ஒருவர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விமானப்படை பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இது குறித்தான புகாரின் பேரில் அந்த விங் கமாண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது நாட்டின் பாதுகாப்பில் நிலம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் பங்கு மிகப்பெரியது. பாகிஸ்தானின் அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானங்கள் எப்போதும் தயாராக இருக்கும். இந்த விமானப்படை தளத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், விமானப்படை தளத்தில் விங் கமாண்டராக பணிபுரியும் நபர் மீது பரபரப்பு பலாத்கார புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் பணியாற்றும் பெண் விமானப்படை அதிகாரி புத்காம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். 

அவரது புகாரில், "கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதிகாரிகளின் மெஸ்ஸில் கொண்டாட்டம் நடந்தது. பின்னர் விமானப்படை பெண் அதிகாரியை தனது அறையில் வைத்து விங்க் கமாண்டர் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தார். அதன் பின்னரும் என்னைப் பின்தொடர்ந்து வந்து, வாய்வழி உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று என்னைத் துன்புறுத்தினார்.

இந்த புகாரின் பேரில் பிரிவு 376 (2) (படைப்பிரிவில் பணி புரியும் போது கற்பழிப்பு) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்திய விமானப்படை சார்பில் குற்றம் சாட்டப்பட்ட விங் கமாண்டர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்ய போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று பெண் அதிகாரி குற்றம் சாட்டினார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.