ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: எதையெல்லாம் வேண்டுகிறோமோ அவையெல்லாம் நிறைவேறும் அதிசயம்!
Vikatan October 20, 2024 01:48 AM

என்னவெல்லாம் வேண்டி வழிபடுகின்றோமோ அதற்கான அருளைத்தரும் ஆற்றல் படைத்த மகாசக்தி ஸ்ரீஅக்ஷ்ர லலிதாம்பிகை. ராமாயண காலத்தில் அக்ஷ்ர ங்களை குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்க லலிதாம்பிகை கோயில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் அமைந்துள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்

மூன்று சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலித்து வருகிறாள். இத்தலத்தில் அம்பிகையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் சேரும். மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும். மேலும் திருமண வரமருளும் தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் உள்ளதால் இது பரிகாரத் தலமாகவும் உள்ளது.

2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் ஸ்ரீஅக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமம் நடைபெற உள்ளது. தசரதர் புத்திரான ஸ்ரீராமபிரான் மகனாக பிறப்பதற்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்வித்த மகரிஷி ரிஷியசிருங்கரால் பூஜித்த அன்னை.

ஆதிபராசக்தி

இவரின் மஹாயாகத்தால் தசரதர் புத்திரர்களை அடைந்தார். இலங்கை மன்னன் இராவணனை போரில் வீழ்த்த ராமபிரான் இந்த அம்மனையின் ஆலயத்தில் சிறப்புமிக்க பஞ்சதக்ஷாச்சரி யாகம் செய்த பின்னரே இராவணனை வெற்றி பெற்றார் என்பது நம்பிக்கை. சிறப்பு மிக்க ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமத்தில் தாங்களும் சங்கல்பித்துக் கொண்டால் 16 செல்வங்களையும் நீண்ட ஆயுளையும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.

நான்கு யுகங்களுக்கு முன்பு அன்னை ஆதிபராசக்தி அங்காளம்மனானாக பூமியில் மலையனூருக்கு எழுந்தருளியபோது, அவளை தரிசிக்கவும், அவள் திருவிளையாடலைக் காணவும் சகல தேவர்களும் தெய்வங்களும் இப்பகுதிக்கு வந்து காத்திருந்தார்கள் என அவ்வூர் தலபுராணம் கூறும். அவ்வகையில் தேவியின் மூல வடிவான ஸ்ரீலலிதாம்பிகை எழுந்தருளிய ஆலயம் இது எனப்படுகிறது. இன்னும் சிறப்பாக இந்த ஆலயத்தில் பீஜாட்சர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது. ஜகன்மாதா ஆதிபராசக்திக்கு உண்டான மந்திரத்தின் சூட்சம எழுத்துக்கள் அவை.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

இங்கே முப்பெருந்தேவியரும் பார்வதி கால சக்தியாக (காலப்பிரம்மம்) லக்ஷ்மி ஒளி சக்தியாக (அர்த்தப்பிரம்மம்)

சரஸ்வதி ஒலி சக்தியாக (நாதப்பிரம்மம்) மூன்று சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையாக அருள் பாலித்து வருகிறாள். இவளை வணங்கினால் ஏழேழ் பிறவிகளிலும் செய்த வினைகளும் தோஷங்களும் நீங்கி இக வாழ்வில் இன்பமும் பர வாழ்வில் மோக்ஷமும் அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

ஸ்ரீலலிதாம்பிகை

அது இந்த ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் ஏன் நீங்கள் செய்ய வேண்டும்?

மந்திர தந்திர யந்திர வடிவான ஸ்ரீமகாலலிதா முதலில் மந்திர வடிவில் வணங்கப்படுகிறாள். ரிஷிகளும் சித்தர்களும் கூர்மையான மந்திரங்களைக் கொண்டே இவளை வணங்கி பல வரங்களையும் சித்துக்களையும் அடைந்தனர் என புராணங்கள் கூறும். இதில் பஞ்ச தசாஷரி மந்திரம் என்பது வேண்டியதை அடையச் செய்யும் மகாமந்திரம். பஞ்ச என்றால் ஐந்து, தசம் என்றால் பத்து, பஞ்ச தசாஷரி என்பது பதினைந்து அக்ஷ்ரங்களைக் கொண்டது என்பது பொருள். ஸ்ரீசக்ர அல்லது ஸ்ரீ சக்ரமேரு பூஜையில் அம்பிகையை ஆவாகணம் செய்யும் போது பின்வரும் மந்திரத்தை பிரயோகித்து ஆவாகணம் செய்வர்.

ஹோமம்

இந்த ஸ்ரீபஞ்ச தசாஷரி மந்திரத்தை கோடி முறைகள் ஜபித்து ஸ்ரீஅன்னையை தரிசித்து பலன் பெற்ற ஞானியர் அநேகம். கோடி முறைகள் இந்த மந்திரத்தை ஜபிக்கும் அதே அளவுக்கான பலன்களை அளிப்பது ஸ்ரீபஞ்ச தசாஷரி மகாஹோமம்.

'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம்: க ஏ ஈ ல ஹ்ரீம் அம் அக்னி மண்டலாய தர்மப்ரததச கலாத்மனே ஸ்ரீ மஹொத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய பாத்ர ஆதாராய நம:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்: ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் உம் ஸூர்ய மண்டலாய அர்த்தப்ரத த்வாதசகலாத்மனே ஸ்ரீ மஹாத்ரிபுரஸூந்தர் விசேஷார்க்ய பாத்ராய நம: இதி ஆதாரோபரிஸம்ஸ்தாப்ய:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸெள: ஸ க ல ஹ்ரீம் மம் ஸோம மண்டலாய காமப்ரதயாஷொடசலாத்மனே ஸ்ரீமஹாத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய அம்தாய நம:

யார் ஒருவர் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜபித்து வருகிறாரோ அவருக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும் என்பது வேதவாக்கு. இந்த ஹோமமும் நிச்சயம் உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றக்கூடியது எனலாம்.

2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் ஸ்ரீஅக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தால் அறிவும் ஆற்றலும் பெருகும். உடல் பலமும் மனோபலமும் அதிகரிக்கும். ஆயுள் விருத்தி உண்டாகும், உங்களின் எல்லா விருப்பங்களையும் வேண்டுதல்களையும் சிறப்பாக நிறைவேற்றித் தரும். ஸ்ரீலலிதாவின் அருள் ஸித்திப்பதற்கும், மகாயோகினிகள் உங்களை எப்போதும் பாதுகாக்கவும் இந்த ஹோமம் உதவும்.

எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும். வம்பு, வழக்குகள், அவமானம் போன்றவைக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கும். பொருள் விரயம், தொழில் முடக்கம், வியாபாரத்தில் தோல்வி, வேலையில் எதிர்ப்புகள் நீங்கும். தரித்திரம் நீங்கும். பாதுகாப்பான எதிர்காலம் உருவாகும்.

குழந்தைப்பேறு, மணப்பேறு, வெளிநாட்டு யோகம், உறவு மேம்பாடு உள்ளிட்ட நன்மைகளும் கிட்டும். முக்கியமாக நோய்கள் தீரும். மங்கல வாழ்வும் மனையறம் விளங்கவும் உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் QR CODE வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில்  வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.